உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் சீரிஸ் அறிமுகத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்

வெப் சீரிஸ் அறிமுகத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்

பாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதற்கான முன் தயாரிப்பு ஆலோசனைகளுக்காக அவர் தற்போது அடிக்கடி மும்பை சென்று வருகிறாராம்.

'அக்கா' எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாக உள்ள இந்த சீரிஸை தர்மராஜ் ஷெட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். ஹிந்தியில் தயாராகும் இந்த சீரிஸ் மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ஹிந்தியில் 'தெறி' ரீமேக்கில் நடிப்பதற்கு முன்பாக இந்த சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடிக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !