உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுரவ தோல்வியை கூட பெற முடியாமல் செய்து விட்டனர்; ‛கோல்டு' தோல்வி குறித்து அல்போன்ஸ் புத்ரன்

கவுரவ தோல்வியை கூட பெற முடியாமல் செய்து விட்டனர்; ‛கோல்டு' தோல்வி குறித்து அல்போன்ஸ் புத்ரன்


பிரேமம் என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலமாக மலையாளம் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அவரது படத்தின் மூலம் அறிமுகமான கதாநாயகிகள் இப்போதும் பரபரப்பாக பிசியான நடிகைகளாக வலம் வருகின்றனர். பிரேமம் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளி விட்டுவிட்ட அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார். ஆனால் இத்தனை வருட காத்திருப்பு வீணானது போல அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் அந்த படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் கூறும்போது, “பிரித்விராஜ் நடித்ததால் கோல்டு படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக கிட்டத்தட்ட ரிலீசுக்கு முன்பே 40 கோடி வரை பிசினஸ் பேசப்பட்டது. ஆனால் திட்டமிட்டு சிலரால் படம் பற்றி எதிர்மறையாக பரப்பப்பட்டு தியேட்டர்களில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கப்படும் விதமாக உள்ளடி வேலைகள் நடைபெற்றன. ஒரு கவுரவமான தோல்வியை கூட பெறவிடாமல் தடுக்கும் அளவிற்கு கோல்டு படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட நபரின் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !