உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்த் மறைவு : சினிமா படப்பிடிப்பு ரத்து

விஜயகாந்த் மறைவு : சினிமா படப்பிடிப்பு ரத்து

விஜயகாந்த் மறைவையொட்டி நாளை (வெள்ளியன்று) சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்பட தயாரிப்பாளர்களை முதலாளி என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.

தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ( 29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சினிமா காலை காட்சிகள் ரத்து
விஜயகாந்த் மறைவால் இன்று(டிச., 28) காலை தமிழக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இதை செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !