ஜன., 5ல் வெளியாகும் அயலான் பட டிரைலர்
ADDED : 644 days ago
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகார் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'அயலான்'. கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தபடம் சில வருடங்கள் கிடப்பில் இருந்த நிலையில் பின்னர் கிராபிக்ஸ் காட்சிகளால் தாமதமாகி வந்தது. தற்போது வரும் ஜனவரி 12ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 5ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.