உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திலீப்

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திலீப்

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக முன்னணி நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு போட்டி போட்டு ஆர்வம் காட்டி வந்தனர். அதற்கு ஏற்ற கதைகளும் தோதாக அமைந்தன. ஆனால் அதற்குப்பின் இத்தனை வருடங்களில் முன்னணி ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் திலீப் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'ஹி அண்ட் ஷி' என்கிற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் திலீப். கதாநாயகிகளாக மம்தா மோகன்தாஸ் மற்றும் நைலா உஷா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன்பாக 2022ல் வெளியான குஞ்சுக்கூனன் என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் அதிலும் குறிப்பாக ஒரு கேரக்டரில் கூன் விழுந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திலீப். இந்த படம் தான் பின்னர் சூர்யா நடிக்க பேரழகன் என்கிற பெயரில் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !