மாணவனாக மாறிய கதிர்
ADDED : 637 days ago
நடிகர் கதிர் தமிழில் பரியேறும் பெருமாள், மதயானைக்கூட்டம் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகனாக மட்டுமின்றி பிகில் மாதிரியான படங்களை போன்று முக்கிய வேடங்களிலும் நடிக்கிறார்.
தற்போது எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கத்தில் 'மாணவன்' என்கிற புதிய படத்தில் கதிர் நடித்து வருகிறார். இதை பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் மாஸ்டர் மகேந்திரன், யுவ லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பார்டியுன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.