விஷால் உடன் கைகோர்க்கும் 5 ஸ்டார் கதிரேசன்
ADDED : 632 days ago
தயாரிப்பாளர் கதிரேசன் தனது 5 ஸ்டார் நிறுவனத்தின் மூலம் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர் தண்டா போன்ற படங்களை தயாரித்தார். சில வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து விலகி இருந்தவர் சமீபத்தில் மீண்டும் ருத்ரன், ஜிகிர்தண்டா 2 ஆகிய படங்களை தயாரித்தார்.
இப்போது மீண்டும் பிஸியாக பட தயாரிப்பில் களம் இறங்கியதால் தொடர்ந்து முன்னனி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போகிறார். இந்த படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என பொங்கல் திருநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.