ரீ ரிலீஸாகும் அஜித் படம்
ADDED : 645 days ago
கடந்த 2001ல் முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'தீனா'. அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அஜித்தை ஆக்ஷன் பாதைக்கு திருப்பிய படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் இளைஞர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அஜித்திற்கு 'தல' என்கிற பட்டம் பிரபலமானது.
ரசிகர்களிடம் அப்போது வரவேற்பை பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸாகிறது. தீனா படம் ரீ மாஸ்டர் டிஜிட்டல் வெர்சன் செய்யப்பட்டு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.