பிரதமர் மோடி தலைமையில் நடந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்
ADDED : 628 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. அங்குள்ள ஆக் ஷன் ஹீரோ என்று இவரை சொல்லலாம். 250க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் அஜித்தின் தீனா, விக்ரமின் ஐ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ஜ. எம்பியாகவும் இருக்கிறார். இவரின் மகள் பாக்யாவிற்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று(ஜன., 17) திருமணம் விமரிசையாக நடந்தது.
பிரதமர் மோடி குருவாயூர் கோயிலுக்கு இன்று வருகை தந்த நிலையில் அப்படியே சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.