நரேன் நடித்துள்ள ‛ஆத்மா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ADDED : 627 days ago
கைதி, விக்ரம் போன்ற வெற்றிப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நரேன் தற்போது முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ஆத்மா. சுஜித் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரத்தா சிவதாஸ் நடித்துள்ளார். அதோடு பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னணி உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, தொடர்ச்சியாக பல மர்ம முடிச்சுக்கள் அவிழ ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஹாரர் கலந்த மிஸ்டரி திரில்லர் கதையில் இந்த ஆத்மா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் துபாயில் நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.