உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 69 பற்றிய தகவல் இதோ...

விஜய் 69 பற்றிய தகவல் இதோ...

நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, கனிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விஜய்யின் 69வது பட பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் 69-ஐ கார்த்திக் சுப்பராஜ் இயக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முதன்முறையாக இவர்கள் இணைகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !