உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தெறி' ஹிந்தி ரீமேக்கின் டைட்டிலை வெளியிட்ட அட்லி

‛தெறி' ஹிந்தி ரீமேக்கின் டைட்டிலை வெளியிட்ட அட்லி

கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம் தெறி. தமிழில் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. அட்லி தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் நடித்த வேடத்தில் வருண் தவான் நடிக்க, சமந்தா வேடத்தில் கீர்த்தி சுரேசும், எமி ஜாக்சன் வேடத்தில் வாமிகா கபி ஆகியோரும் நடித்து வருகிறார்கள். காளீஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு பேபி ஜான் என்று பெயர் வைத்துள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அட்லி. இந்த படம் வருகிற மே 31ம் தேதி திரைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !