ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட், மலையாள பிரபலங்கள்
ADDED : 611 days ago
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க போகிறார். சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிர்ணாள் தாக்கூர் அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இப்படம் அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகிறது.