உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 1461 நாட்கள் காதலில்… ரஜிஷா விஜயன் காதலர் தகவல்…

1461 நாட்கள் காதலில்… ரஜிஷா விஜயன் காதலர் தகவல்…

காதலிப்பவர்களுக்கு பல விஷயங்கள் பல நினைவுகள்… காதலிக்கும் நாட்களைக் கூட இந்த அளவிற்கு யாராவது எண்ணி வருவார்களா என்று கேட்க வைத்திருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன் காதலர் டோபின் தாமஸ்.

தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதன்பின் 'ஜெய் பீம், சர்தார்' ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கும் மலையாள திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருக்கும் காதல்.

சில தினங்களுக்கு முன்பு டோபின் தாமஸ், ரஜிஷாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “1461 நாட்கள்… சூரியனைச் சுற்றி மற்றுமொரு பயணத்திற்கு எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதிக காதல், சிரிப்பு, இருவரது வினோத குணங்கள்…” எனப் பதிவிட்டுள்ளார்.

அதற்கு ரஜிஷா விஜயன், “1461 = 30 x ? + 1 x ? - 1 x ? - 2 x ?.... முடிவில்லாத காதல்...” என எமோஜிக்களுடன் கமெண்ட் செய்துள்ளார்.

காதலர்களை ரசிகர்களும், மலையாளத் திரையுலகினரும் வாழ்த்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !