இந்த ஆண்டில் ‛புதுப்பேட்டை 2' : செல்வராகவனின் எதிர்பார்ப்பு
ADDED : 610 days ago
இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'புதுப்பேட்டை'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் இன்று வரை ரசிகர்களிடம் கொண்டாடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், பின்னர் இந்த படத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
கடந்த சில வருடங்களாக புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகும் என செல்வராகவன், தனுஷ் என இருவரும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், இது குறித்து எந்த அப்டேட் வெளிவரவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென செல்வராகவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛இந்த வருடத்தில் புதுப்பேட்டை 2 உருவாகும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன் சொன்னது இந்தாண்டில் நடக்கும் என நம்புவோம்.