இளம் நடிகருக்கு ஜோடியாகும் பேபி பட நடிகை
ADDED : 642 days ago
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி சைதன்யா. இதற்கு முன்பு தமிழில் 'வலிமை' படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேபி படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க வைஷ்ணவி சைதன்யா உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொம்மரிலு பாஸ்கர், நடிகர் சித்து ஜொனலகட்டாவை ஹீரோவாக வைத்து இயக்கும் 'ஜாக்' என்கிற புதிய படத்தில் நடிகை வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடிப்பதாக படக்குழு குறிப்பிட்டுள்ளனர்.