அரபிக்குத்துக்கு ‛பெல்லி' டான்ஸ் ஆடிய கிர்த்தி ஷெட்டி
ADDED : 617 days ago
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. அனிருத் இசை அமைத்திருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த பாடல் வெளியான சமயத்தில் பலரும் இந்த பாடலுக்கு அதிக அளவில் ரிலீஸ் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி தற்போது இந்த பாடலுக்கு வித்தியாசமான முறையில் பெல்லி டான்ஸ் ஆடி உள்ளார். இன்னொரு நடன மங்கையுடன் சேர்ந்து இந்த பாடலுக்கு இவர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.