பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த மலையாள வில்லன்
ADDED : 616 days ago
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 109வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிரஞ்சீவி நடித்து வெற்றி பெற்ற வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய இயக்குனர் பாபி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுட்டேலா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.
நடிகர் துல்கர் சல்மானும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இவர் விஜய் நடித்த பீஸ்ட், நானி நடித்த தசரா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.