கர்நாடகாவில் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 'வாரணம் ஆயிரம்'
ADDED : 591 days ago
கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இதில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்போது இந்தபடம் சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில் இப்படம் தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் ஆனது. கூடுதலாக, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்தனர். இப்போது வரை கர்நாடகா மாநிலத்தில் மட்டும் ரூ. 75 லட்சம் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் அறிவித்துள்ளார்.