மீண்டும் படம் இயக்கி நடிக்கும் எஸ்.ஜே .சூர்யா
ADDED : 608 days ago
அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் நியூ உள்ளிட்ட பல படங்களில் தானே ஹீரோவாக நடித்து அந்த படங்களையும் இயக்கி வந்தார். மேலும், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா-2 படங்களுக்கு பிறகு, இந்தியன் -2, கேம் சேஞ்சர், ராயன் உள்ளிட்ட பல படங்களில் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க போகிறார் எஸ்.ஜே.சூர்யா. முழுக்க முழுக்க ஆக்ஷன் தில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு கில்லர் என்று அவர் டைட்டில் வைத்துள்ளார். இப்படத்தில் ஒரு கார் முக்கிய கேரக்டரில் வருகிறது. இந்த கார் தான் கில்லர் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.