ராயன் படத்தின் அடுத்த நட்சத்திரத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்
ADDED : 590 days ago
தனுஷ் இயக்கி நடித்துள்ள ஐம்பதாவது படமான ராயன் படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் போஸ்டரை வெளியிட்டு வருகிறார் தனுஷ். அந்த வகையில், எஸ். ஜே .சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்ட தனுஷ், தற்போது இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . கருப்பு வெள்ளையில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவுள்ளது.