சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த டான்சிங் ரோஸ்
ADDED : 635 days ago
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் மூலம் பிரபலமான சபீர் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த 'பர்த் மார்க்' படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.