பேத்தி இயக்கிய குறும்படத்தில் நடித்த பாரதிராஜா
ADDED : 586 days ago
தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம் தொடங்கி ஏராளமான மண்வாசனை படங்களை இயக்கியவர் பாரதிராஜா. சமீபகாலமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் மனோஜ் சில படங்களில் நடித்தவர், கடந்த ஆண்டில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் பாரதிராஜாவின் பேத்தியும், மனோஜின் மகளுமான மதிவதனி, தான் பயிலும் பள்ளிக்காக ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். அந்த குறும்படத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். இதையடுத்து பேத்தி இயக்கிய படத்தை பார்த்து பாரதிராஜா, அவரை பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்து இருக்கிறார்.