உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு வெளியிட்ட வீடியோவால் ஏமாந்து போன ரசிகர்கள்

சிம்பு வெளியிட்ட வீடியோவால் ஏமாந்து போன ரசிகர்கள்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் 48வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், பாகுபலி படம் அளவுக்கு பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்து அது சிம்புவின் 48வது படத்தின் காட்சிகள் தான் என்று அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் வைரலாக்கியதோடு, இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யும் என்றெல்லாம் கமெண்ட்டுகளை கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது சிம்பு வெளியிட்டிருந்த அந்த வீடியோ அவர் நடித்துள்ள ஒரு விளம்பர படத்தின் காட்சிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !