‛எதிர்நீச்சல்' மீது மதுமிதா மீது வழக்கு பதிவு
ADDED : 592 days ago
எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள மதுமிதா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் ஒருவழிப்பாதையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாக தெரிகிறது. இதில் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை மதுமிதா அவரது நண்பர் இருவரும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.