ஜெயம் ரவி படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்
ADDED : 594 days ago
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் யோகி பாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. அதோடு ஏ. ஆர் .ரஹ்மான், ஸ்ருதிஹாசன், சினேகன் ஆகியோருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.