கங்குவா பட காட்சிகளை சென்னை வந்து பார்த்த பாபி தியோல்
ADDED : 587 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யா டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் சென்னை வந்த கங்குவா படத்தின் வில்லனான பாபி தியோல் அப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். அவரையும் அவரது மகனையும் பூங்கொத்து கொடுத்து தான் வரவேற்ற புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா .