என்டிஆர் படத்தைத் தொடர்ந்து ராம் சரண் படத்தில் ஜான்வி கபூர்
ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் ஹாலிவுட் வரை தெலுங்கு நடிகர்களான ஜுனியர் என்டிஆர், ராம் சரண் பிரபலமானார்கள். அப்படத்திற்குப் பிறகு என்டிஆர் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகிறார்.
தற்போது ராம் சரண் நடிக்க உள்ள 16வது படத்திலும் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று ஜான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்கிறார் ஜான்வி.
ராம்சரணின் 16வது படத்தை 'உப்பெனா' இயக்குனர் புச்சிபாபு இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.
தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ஜான்வி, தமிழ்ப் படங்களில் நடிப்பாரா அல்லது தவிர்ப்பாரா என்பது எதிர்வரும் காலங்களில் தெரியும். அவரது அப்பா போனி கபூர், அஜித் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.