வெள்ளித்திரைக்கு சென்ற தியா தர்மராஜ்
ADDED : 581 days ago
சின்னத்திரை நடிகையான தியா தர்மராஜ், ‛மலர்' என்கிற தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவர் மாடலிங் செய்து கொண்டிருந்தார். தற்போது அவர் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் கார்டியன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் நாளை மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திரைப்படக்குழுவினருடன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தியாவின் சினிமா என்ட்ரிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.