உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரை மணந்தார் நடிகை நிலா

காதலரை மணந்தார் நடிகை நிலா

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‛அன்பே ஆருயிரே' என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் நிலா. அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நிலா விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தனது நீண்டகால காதலர் ரக் ஷித் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.



டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராஜஸ்தானி முறைப்படி இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து சில பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். மணமக்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !