கிளாமர் போட்டோசூட்டில் ரகுல் பிரீத் சிங்
ADDED : 573 days ago
‛அயலான்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். அதோடு, ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் அவருக்கும், பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னாணிக்கும், சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் கூட செல்லாமல் இரண்டு பேருமே தாங்கள் கமிட்டாகியுள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.
ரகுல் பிரீத் சிங்கை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகும் எந்தவித தடையும் இல்லாமல் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சிவப்பு நிற உடை அணிந்து ஒரு கிளாமர் போட்டோ சூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.