மலைக்கா அரோராவுடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த நயன்தாரா
ADDED : 621 days ago
நயன்தாரா சமீபநாட்களாக தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக வருகை தந்திருந்தார் நயன்தார. அந்தசமயம் அங்கே பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் வந்தார்.
நயன்தாராவும், மலைக்காவும் இந்தப் போட்டியை சில மணி நேரங்கள் ஒன்றாக இணைந்து பார்த்து ரசித்துள்ளனர். இருவருமே தாங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். மலைக்காவுடனான சந்திப்பு குறித்து நயன்தாரா கூறும்போது உங்களை சந்தித்தது இனிமையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.