உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியில் ரித்திகா சிங்

ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியில் ரித்திகா சிங்

ஜெய் பீம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிய த.செ. ஞானவேல், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி, ஐதராபாத், மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

ஐதராபாத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் பஹத் பாசில், ராணா, துஷாரா விஜயன் என இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்களுக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினி உடன் இணைந்து நடித்த சந்தோஷத்தில் அவருடன் படப்பிடிப்பு முடிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரித்திகா சிங்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !