கோலாகலமாக நடந்த ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு நிகழ்ச்சி
ADDED : 566 days ago
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. சீரியல்களை தாண்டி சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு அசோக் என்பவருடன் திருமணமாகி சித்தாரா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஸ்ரீதேவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு தற்போது கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. அதில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ருதிராஜ் அதன் வீடியோவை இண்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.