சோஷியல் மீடியாவில் இருந்து விலகுகிறேன் : பிரியங்கா நல்காரி
ADDED : 560 days ago
ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அதன்பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த அவர் காதல் கணவருக்காக நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா கணவரை விட்டு பிரிந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்செட்டான பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போவதாக அறிவித்துள்ளார். மேலும், புரோமோஷனுக்காக சிலர் அனுப்பிய நகைகள், ஆபரணங்கள், உடைகளையும் திருப்பி அனுப்பி விடுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பிரியங்காவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.