ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் கோலாகலம்
ADDED : 609 days ago
சின்னத்திரையில் வெளிச்சம் பெற்று தற்போது சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா. விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார். இந்திரஜா தனது உறவுக்காரரான கார்த்திக்கை காதலித்தார். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஒருவாரமாக திருமணம் தொடர்பான நிகழ்வுகள் கொண்டாட்டமாக நடந்து வந்தன. இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக் திருமணம் மதுரையில் இன்று(மார்ச் 24) கோலாகலமாய் நடந்தது. திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.