ரேவதியுடன் ராம்ப் வாக் நடந்த வாணி கணபதி
ADDED : 609 days ago
நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி, நடிகை மட்டுமல்ல பரதநாட்டிய கலைஞரும் கூட. இவரும் நடிகை ரேவதியும் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற உறுப்புகள் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் அங்கிருந்த மேடையில் ஒன்றாக ராம்ப் வாக் நடந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
தாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி கணபதி. இதுகுறித்து வாணி கூறும்போது, “ரேவதியை அவர் 'ஆஷா கேலுன்னி'யாக இருந்த காலகட்டத்தில் இருந்தே எனக்கு தெரியும். நீண்ட நாளைக்கு பிறகு அவருடன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் இருவரும் பயிற்சி பெற்ற மாடல்கள் இல்லை என்றாலும் சிலர் பாராட்டும்படியாக ராம்ப் வாக் நடந்தோம் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.