உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த விஷயம் பிடிக்கவில்லை : கிர்த்தி சனோன்

இந்த விஷயம் பிடிக்கவில்லை : கிர்த்தி சனோன்

பாலிவுட்டின் பிரபல நடிகை கிர்த்தி சனோன். ஹிந்தியில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடியாக சீதா வேடத்தில் நடித்தார். பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருதும் வாங்கி உள்ளார். தற்போது ‛க்ரூ' என்ற படத்தில் தபு, கரீனா கபூருடன் இணைந்து நடித்துள்ளார். மார்ச் 29ல் ரிலீஸாகிறது.

கிர்த்தி கூறுகையில், ‛‛நடிகர்களும் மனிதர்கள் தான். கலைஞர்கள் என்பதால் செய்தியாளர்கள், கேமரா முன்பு நாங்கள் வலுவானவர்கள் போன்று காண்பிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மனதில் வேறுமாதிரியான உணர்வுகள் உள்ளன. அதை மறைக்கிறோம். இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !