யாஷிகா ஆனந்தின் 'படிக்காத பக்கங்கள்'
ADDED : 563 days ago
திகில் படமா, கிரைம் த்ரில்லர் படமா, பேய் படமாக கூப்பிடுங்கள் யாஷிகா ஆனந்த்தை என்கிற நிலைதான் இப்போது. ஏற்கெனவே பல திகில் படங்களில் நடித்து முடித்து விட்ட யாஷிகா ஆனந்த் தற்போது நடித்துள்ள படம் 'படிக்காத பக்கங்கள்'.
இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. செல்வம் மாதப்பன் இயக்கி உள்ளார். யாஷிகாவுடன் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்காடுக்கு ஒரு குழுவினர் சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் தங்கி உள்ள ரிசார்ட்சில் ஒரு பிரபல நடிகை கொல்லப்படுகிறார். அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.