ராம்சரணின் பிறந்தநாளில் வெளியாகும் கேம் சேஞ்சர் முதல் பாடல்
ADDED : 565 days ago
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே .சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். தமன் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் கேம் சேஞ்சர் திரைக்கு வருகிறது. நாளை ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசாக நாளை காலை 9 மணிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி என்ற முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளது.