மார்ச் 29ல் ‛ரத்னம்' இரண்டாவது பாடல் வெளியாகிறது
ADDED : 561 days ago
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ரத்னம். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகி உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் உருவான ‛டோன்ட் வொரி மச்சி' என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான ‛எதனால...' மார்ச் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.