பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி
ADDED : 558 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆர்த்திகா. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‛‛சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்களால் தான் மற்ற பெண்களையும் அப்படியே நினைத்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள். அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும். அதேபோல் எனக்கு கவர்ச்சியாக உடை அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். இதனால் எனக்கு பணம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை'' என்று கூறியுள்ளார்.