மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
548 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
548 days ago
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விஷால் தற்போது நடித்து வரும் 'ரத்னம்' படத்திற்காக விஷாஷக்கு வழங்க வேண்டிய 2 கோடியே 60 லட்சம் சம்பள நிலுவை தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை ஹரி இயக்குகிறார். ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷாலுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகினி, கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்காக விஷாலுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
548 days ago
548 days ago