விடாமுயற்சி : ஆரவ்விற்கு பைக் பரிசளித்த அஜித்?
ADDED : 557 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 19ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. கடந்த வாரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பின்போது அஜித், ஆரவ் இருவரும் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த நிலையில் ஆரவ்விற்கு நடிகர் அஜித்குமார் 30 லட்சம் மதிப்பில் ஒரு பைக் பரிசளித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த பைக்குடன் ஆரவ் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.