உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் வேட்டையன் படத்தில் காமெடி ரோலில் பஹத் பாசில்

ரஜினியின் வேட்டையன் படத்தில் காமெடி ரோலில் பஹத் பாசில்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் அதிரடி வில்லனாக நடித்திருந்த பஹத் பாசில் இந்த படத்திலும் அது போன்ற வேடத்தில் தான் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹத் பாசில் அளித்துள்ள ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தான் காமெடி ரோலில் நடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து தான் காமெடி காட்சிகளில் நடித்திருப்பதாகவும், அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்திலும் பஹத் பாசில் அதிரடி வில்லனாகதான் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ, தான் காமெடி ரோலில் நடித்திருப்பதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால் வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்திருப்பது யார் என்ற கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !