உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன் 2வில் மனீஷா கொய்ராலா

இந்தியன் 2வில் மனீஷா கொய்ராலா

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இடம் பெற உள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ள இயக்குனர் ஷங்கர், விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !