அரசு மரியாதையோடு ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்
ADDED : 589 days ago
தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன், 98, உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று (ஏப்., 9) காலமானார். மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தி.நகர் இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ரஜினி, இளையராஜா, நாசர், எஸ்வி சேகர், தியாகராஜன், மோகன்ராம், பரத், பாக்யராஜ் உள்ளிட்ட பல திரைக்கலைஞர்களும், சைதை துரைசாமி, திருநாவுக்கரசு, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.