சல்மான்கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு
ADDED : 543 days ago
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை அருகே பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடைபெறும் போது சல்மான் கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.