உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா!

மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா!


தற்போது ‛டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்த நயன்தாரா, தற்போது ‛டியர் ஸ்டூடண்ட்' என்ற படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் நயன்தாரா டீச்சர் கேரக்டரில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய், சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !