திருமண நாளில் செல்பி பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்
ADDED : 532 days ago
'பொன்னியின் செல்வன்' படத்தில் கடைசியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று(ஏப்.,21) திருமண நாளை முன்னிட்டு செல்பி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கணவர் அபிஷேக்பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் 'ஹாட்டின் எமோஜி' ஒன்றை மட்டுமே சேர்த்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா அவரது கணவர் அபிஷேக்கை விட்டு பிரிய உள்ளார் என்ற வதந்திகள் வெளிவந்தன. அப்போதும் பேமிலி செல்பி ஒன்றைப் பகிர்ந்து அவற்றிற்கு பதிலடி கொடுத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஐஸ்வர்யா இதுவரை ஒப்பந்தமாகவில்லை.